
கோலாலம்பூர், அக்டோபர்-21, 100 ரிங்கிட் தொடக்க விலையில் MADANI சிறப்பு வாகனப் பதிவு பட்டை எண்களை போக்குவரத்து அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
மலேசியர்களின் வாழ்க்கை முறையில் மடானி தத்துவத்தை பிரதிபலிக்கச் செய்யும் முயற்சியில் இந்த MADANI சிறப்பு பட்டை எண் வரிசை அறிமுகமாகியுள்ளது.
முதன்மை எண்ணுக்கு 20,000 ரிங்கிட், பிரீமியம் எண்ணுக்கு 5,000 ரிங்கிட், சிறப்பான எண்ணுக்கு 2,500 ரிங்கிட், பிரபலமான எண்ணுக்கு 500 ரிங்கிட், நடப்பு எண்களுக்கு 100 ரிங்கிட் என ஏல விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
JPJeBid இணைய அகப்பக்கத்தில் சனிக்கிழமை திறக்கப்பட்ட அதற்கான பதிவு, வரும் புதன்கிழமை இரவு 10 மணியோடு மூடப்படுமென, சாலைப் போக்குவரத்துத் துறை JPJ தெரிவித்தது.
MADANI பட்டை எண்களுக்கான ஏல முடிவுகள் அக்டோபர் 24-ஆம் தேதி வெளியிடப்படும்.
ஏலத்தில் வெற்றிப் பெற்றவர்கள் கடிதம் கிடைத்த நாளிலிருந்து அடுத்த 12 மாதங்களுக்குள் எண்களைப் பதிவுச் செய்திட வேண்டும்.