
கோலாலம்பூர், அக்டோபர்-22, மடானி புத்தகப் பற்றுச் சீற்றை இதுவரை 1.9 மில்லியன் மாணவர்களும், இடைநிலைக் கல்வியை முடித்தவர்களும் பயன்படுத்தியுள்ளனர்.
அவர்களில் 661,487 பேர் ஆரம்பப் பள்ளியின் இரண்டாம் படிநிலை மாணவர்கள், 1.2 மில்லியன் பேர் இடைநிலைப் பள்ளி மாணவர்கள், எஞ்சிய 61,806 பேர் தொழிற்பயிற்சிக் கல்லூரி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஆவர்.
நேற்று வரை பயன்படுத்தப்பட்டு விட்ட மடானி புத்தகப் பற்றுச் சீட்டுகளின் மதிப்பு 157 மில்லியன் ரிங்கிட் என, கல்வி துணையமைச்சர் வோங் கா வோ (Wong Kah Woh) தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக 39 லட்சம் புத்தககங்கள் வாங்கப்பட்டுள்ளதாக, மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது அவர் சொன்னார்.
ஆரம்பப் பள்ளியின் இரண்டாம் படிநிலை மாணவர்களுக்கு 50 ரிங்கிட் விலையிலும், இடைநிலைப் பள்ளி முதல் உயர்க் கல்விக் கூடம் வரையிலான மாணவர்களுக்கு 100 ரிங்கிட் விலையிலும் புத்தகப் பற்றுச் சீட்டு வழங்கும் திட்டத்தை கடந்த மே மாதம் பிரதமர் அறிவித்திருந்தார்.