குவாலா கிராய், அக்டோபர்-28, கிளந்தான், குவாலா கிராய், கம்போங் ஙாஙா கிராம மக்களுக்குச் சொந்தமான 3 ஆடுகளை விழுங்கிய அசதியில் தூங்கிய 7 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது.
ஒரு பெரிய ஆட்டையும் அதன் 2 குட்டிகளையும் விழுங்கி, 240 கிலோ எடையில் ஆட்டுக் கொட்டகையிலேயே நகர முடியாமல் அந்த பாத்திக் வகை மலைப்பாம்பு படுத்துகிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆடுகளின் உரிமையாளர் தீயணைப்பு மீட்புத் துறைக்கு தகவல் கொடுத்தார்.
எழுவர் கொண்ட தீயணைப்புப் படையினர் வெறும் பத்தே நிமிடங்களில் மலைப்பாம்பைப் பிடித்தனர்.
பின்னர் அது வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னிடம் ஒப்படைக்கப்பட்டது.