கோலாலம்பூர், நவ 22 – வர்த்தக வளாகத்தில் முறையான வர்த்தக லைசென்ஸ் இன்றி செயல்பட்டு மற்றும் வெளிநாட்டு பிரஜைகளால் நடத்தப்பட்டு வந்த ஆறு கடைகளில் திடீர் சோதனை நடத்திய கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள் அந்த கடைகளை உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். 2016 ஆம் ஆண்டின் வர்ததக தொழில்துறை லைசென்ஸ் மற்றும் சிறுதொழில் சட்டத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தவிர 1976ஆம் ஆண்டின் ஊராட்சி மன்றத்தின் சட்டத்திற்கு ஏற்ப அந்த கடைகளுக்கு எதிராக 8 நோட்டிஸ்களும் வழங்கப்பட்டதாக தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் கோலாலம்பூர் மாநாகர் மன்றம் தெரிவித்துள்ளது.
அடையாளம் காணப்படும் வர்த்தக இடங்களில் அவ்வப்போது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்பதோடு தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் லைசென்ஸ் இன்றி செயல்படும் கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் வலியுறுத்தியது.