பாலேக் பூலாவ், டிச 4 – பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் இரு விமானத்தின் வெவ்வேறு பயணிகளிடம் பணத்தை திருடிய குற்றச்சாட்டை சீனாவின் இரு பிரஜைகள் ஒப்புக்கொண்டனர்.
மாஜிஸ்திரேட் சியா ஹூவே திங் ( Chia Huey Ting ) முன்னிலையில் 51 வயதுடைய He Dapeng மற்றும் 61 வயதுடைய Xin Min ஆகியோர் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி காலை மணி 8.20க்கும் 8.40 க்குமிடையே உள்நாட்டைச் சேர்ந்த 33 வயதுடைய ஆடவரிடமிருந்து 2,000 ரிங்கிட்டை He Dapeng திருடியதாக குற்றச்சாட்டப்பட்டது.
அதே வேளையில் Xin Min நவம்பர் 24ஆம் தேதி காலை மணி 10.20க்கும் 10.30 க்குமிடையே உள்நாட்டைச் சேர்ந்த 31 வயது ஆடவரிடமிருந்து 200 ரிங்கிட் மற்றும் 24,000 New தைவான் டாலரை திருடியதாக குற்றச்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள்வரை சிறை அல்லது அபாரதம் அல்லது அவையிரண்டும் விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 379ஆது விதியின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.
இக்குற்றத்திற்காக He Depeng கிற்கு 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட வேளையில் Xin Min னுக்கு 3,700 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் அவர்கள் இருவரும் மூன்று மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.