சண்டாக்கான், டிசம்பர்-15,சபா, சண்டாக்கான், Batu 8-னில் குப்பைக் கொட்டும் இடத்தருகே உள்ள புறம்போக்குக் குடியிருப்பில் ஒரு வெளிநாட்டு ஆடவரை முதலை அடித்துக் கொன்றது.
நேற்று முன்தினம் இரவு 8.20 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததை, சண்டாக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் கே.ராமசாமி உறுதிப்படுத்தினார்.
சம்பவத்தின் போது, 28 வயது அவ்வாடவர் மரப்பாலம் வழியாக தனது அண்ணனின் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மீது பாய்ந்து முதலை கவ்வியது.
வலியில் துடித்தவர் உதவிக் கோரி கூச்சலிட்டுள்ளார்.
ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
அதே இரவு 9.30 மணி வாக்கில் குடும்ப உறுப்பினர்கள் அவரின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
அவ்வாடவரின் உடலில் முதலைக் கடித்த காயங்கள் காணப்பட்டதாக, அறிக்கை வாயிலாக ராமசாமி தெரிவித்தார்