புக்கிட் ஜாலில், டிசம்பர்-30, MEX நெடுஞ்சாலையில் இன்று காலை மின்னியல் டோல் கட்டண முறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் போக்குவரத்து நிலைக்குத்தியது.
இதனால் வேலைக்குச் செல்லும் வாகனமோட்டிகள் புத்ராஜெயா டோல் சாவடியில் நீண்ட வரிசைகளில் கடும் ஏமாற்றத்தில் காத்திருந்தனர்.
காலை 6.10 மணியிலிருந்தே RFID, Touch ‘n Go, OPS எனப்படும் டெபிட் அட்டையின் மூலமாக டோல் கட்டணம் செலுத்தும் முறைகள், அந்தத் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டதாக MEX நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனம் கூறியது.
காலை 7 மணி வரையிலும் பாதிப்பு நீடித்துள்ளது.
மற்ற பாதைகள் வழக்கம் போல் செயல்பட்டன.
எனினும் காலை 7.30 மணி வாக்கில் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு அனைத்து டோல் பாதைகளும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியதாக MEX தெரிவித்தது.