
கூச்சிங், ஜனவரி-4, சரவாக் கூச்சிங்கில் இன்று அதிகாலை வீடு இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி ஆடவர் உயிரிழந்தார்.
மரணமுற்றவர் 58 வயது Lim Inn Tong என அடையாளம் கூறப்பட்டது.
அதிகாலை 2.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புத் துறையினர் இடிபாடுகளில் பேச்சு மூச்சின்றி கிடந்த அவ்வாடவரை, 2 மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
எனினும் மருத்துவக் குழு அவர் உயிரிழந்து விட்டதை உறுதிபடுத்தியது.
வீடு இடிந்து விழுந்ததற்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக தீயணைப்புத் துறை கூறியது.