Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

தைவானில் மலேசிய மாணவியை கொலைச் செய்த ஆடவனுக்கு மரண தண்டனை நிலைநிறுத்தம்

தைப்பே, ஜனவரி-16, தைவானில் மலேசிய மாணவியைக் கடத்தி, கற்பழித்து கொலைச் செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆடவனின் மரண தண்டனையை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது.

கொலைச் செய்ய Liang Yu-chih-க்கு இருந்த நோக்கம், அவனின் கொடூரச் செயல் மற்றும் அதே தவற்றை அவன் திரும்பச் செய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பது போன்ற காரணங்களால் மரண தண்டனையை நிலைநிறுத்துவதாக, மறு விசாரணையின் முடிவில் நீதிமன்றம் அறிவித்தது.

2022-ல் மாவட்ட நீதிமன்றத்தால் Liang-கிற்கு அந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2020 அக்டோபர் 28-ஆம் தேதி தைவானில் தான் படிக்கும் கல்லூரி அருகே தனியாக நடந்துசென்ற மலேசிய மாணவியை Liang கடத்திக் கற்பழித்தான்.

பின்னர் அப்பெண்ணை சரமாரியாகத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொன்றான்.

அப்பெண்ணின் பணப்பை மற்றும் இதர பொருட்களை அபகறித்துக் கொண்டு, சடலத்தை வீசி விட்டான்.

அம்மாணவியின் பல்வேறு உடல் உறுப்புகளில் இரத்த கசிவு ஏற்பட்டு அவர் கொடூரமாக இறந்திருப்பதை வைத்துப் பார்க்கும் போது, நன்கு திட்டமிட்டே Liang அக்கொலையைச் செய்திருப்பது தெளிவாகிறது.

தவிர, அதே 2020 செப்டம்பரில் மற்றொரு பெண்ணை Liang கற்பழிக்க முயன்றது, முந்தைய வழக்கில் நிரூபிக்கப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியது.

மிகவும் தீவிரமான, திட்டமிடப்பட்ட கொலைகளுக்கு வழிவகுக்கும் குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை வழங்க முடியுமென, தைவானிய
அரசியலமைப்பு நீதிமன்றம் 2024 செப்டம்பரில் தீர்ப்பளித்த பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!