Latestமலேசியா

மடானி புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்படலாம்

நிபோங் திபால், ஜனவரி-17,கடந்தாண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மடானி புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் நல்லப் பலனைத் தந்திருப்பதால், வரும் காலத்தில் அது ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்படலாம்.

கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் அதனைக் கோடி காட்டியுள்ளார்

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு 50 ரிங்கிட்டும், இடைநிலைப் பள்ளி மற்றும் உயர் கல்விக் கூட மாணவர்களுக்கு 100 ரிங்கிட்டுமாக வழங்கப்பட்ட அப்புத்தகப் பற்றுச் சீட்டை, கடந்தாண்டு அனைத்து மாணவர்களும் பயன்படுத்தினர்.

அவ்வெற்றி குறித்து விரைவில் அமைச்சரவையில் தாம் தாக்கல் செய்யவுள்ள அறிக்கையில், அதனை ஆசிரியர்களுக்கு விரிவுப்படுத்தும் பரிந்துரையும் இடம்பெறுமென அவர் சொன்னார்.

நிதியமைச்சருடன் அது குறித்து விவாதிப்பதாகவும் கூறிய ஃபாட்லீனா, நல்ல செய்தி கிடைக்குமென நம்பிக்கைத் தெரிவித்தார்.

இத்திட்டம், வாசிப்பு கலாச்சாரத்திலும், குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

கடந்தாண்டு மே மாதம் கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தக விழாவைத் தொடக்கி வைத்த பிரதமர், அரசு மற்றும் தனியார் உயர் கல்விக் கூட மாணவர்களுக்கு இந்த மடானி புத்தகப் பற்றுச் சீட்டு உதவியை அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!