
கோலாலம்பூர், ஜன 24 – Yayasan Albukhary அறநிறுவனத்திற்கு வரி விலக்கை ரத்துச் செய்யப்பட்ட விவகாரத்தில் லிம் குவான் எங் தொடுத்திருந்த அவதூறு வழங்கில் அவருக்கு 1.4 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழக்கும்படி நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பை முஹிடின் யாசின் முழுமையாக நிறைவு செய்தார். அந்த தொகையின் எஞ்சிய 1 மில்லியன் ரிங்கிட் தொகையை பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான முஹிடின் ஒப்படைத்துவிட்டதாக லிம் குவான் எங்கின் வழக்கறிஞர் Guok Ngek Seong தெரிவித்தார்.
இந்த தொகையை வழங்குவதற்கு ஜனவரி 27 ஆம் தேதி கால அவகாசம் விதிக்கப்பட்டதற்கு முன்னதாகவே 1 மில்லியன் ரிங்கிட்டை லிம்மின் வழக்கறிஞர் நிறுவனத்திற்கு முஹிடின் செலுத்திவிட்டார். அந்த தீர்ப்பின் முதல் கட்ட தொகையான 400,000 ரிங்கிட்டை கடந்த டிசம்பர் மாதம் முஹிடின் வழங்கியிருந்தார்.