
நீலாய், பிப்ரவரி-1 – LEKAS எனப்படும் காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலையின் 18-ஆவது கிலோ மீட்டர் முதல் 20-ஆவது கிலோ மீட்டர் வரை எதிர் திசையில் வாகனமோட்டிச் சென்ற ஆடவர் கைதாகியுள்ளார்.
நீலாய் போக்குவரத்து போலீஸ் தலைமையகத்தில் நேற்று மாலை சரணடைய வந்த போது, 72 வயது அம்முதியவர் கைதுச் செய்யப்பட்டார்.
பழுப்பு நிற Perodua Axia கார் காஜாங் நோக்கிச் செல்லும் பாதையில் எதிர் திசையில் பயணிக்கும் வீடியோ முன்னதாக வைரலாகியிருந்தது.
இதையடுத்து காரின் உரிமையாளரை அடையாளம் கண்ட போலீஸ், வாக்குமூலம் அளிக்க வருமாறு அவரைக் கேட்டுக் கொண்டது.
அம்முதியவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், சம்பவத்தின் போது சிரம்பானில் உள்ள தனது வீட்டுக்கு அவர் சென்றுக் கொண்டிருந்ததும் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
எனினும், மேற்கொண்டு விசாரணைகள் நடைபெறுவதாக, நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் அப்துல் மாலிக் ஹஷிம் தெரிவித்தார்.