
ஜெய்ப்பூர், பிப்ரவரி-22 – இந்தியா, ராஜஸ்தானில் உடற்பயிற்சி மையத்தில் 270 கிலோ எடை தூக்கும் பயிற்சியின் போது, பதின்ம வயது வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்தார்.
17 வயது யஷ்டிகா ஆச்சார்யா (Yashtika Acharya) இளையோருக்கான தேசியப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவராவார்.
இந்நிலையில் செவ்வாக்கிழமைத் தலைக்கு மேல் 270 கிலோ கிராம் எடையைத் தூக்கிய போது யஷ்டிகா நிலைத் தடுமாறியதால், எடையின் கம்பி அவரின் கழுத்தில் பலமாகப் பட்டு விட்டது.
இதனால் அதிக எடை தாங்காது அவரின் கழுத்து முறிந்தது.
உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
சம்பவத்தின் போது உடனிருந்த யஷ்டிக்காவின் பயிற்றுநருக்கும் அதில் காயமேற்பட்டது.
சம்பவ வீடியோ வைரலாகி, இளம் வயதில் வீராங்கனையின் உயிர் போனது குறித்து வலைத்தளவாசிகள் கவலையும் அனுதாபமும் தெரிவித்து வருகின்றனர்.