
கோலாலம்பூர் , மார்ச் 4 – Era FM வானொலி அறிவிப்பாளர்களின் செயல் கண்டிக்கத் தக்கது என்பதோடு இந்தியர்களின் நம்பிக்கையை பெரிதும் சீண்டியுள்ளதால் , இந்தியர்களின் நம்பிக்கையை அவமதித்த அவர்கள் மீது அஸ்ட்ரோ வானொலி முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தக் காணொளியில், அவர்கள் தைப்பூச புனித நாளை கேலி செய்திருப்பது பல சமூல வலைத்தலங்களில் பகிரப்பட்டிருக்கிறது.
அந்தக் காணொளியில் உள்ளவர்களின் செயல்கள் இந்தியர்களைப் புண்படுத்தும் வகையிலும், கவலையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.
இது மலேசிய நாட்டின் அடையாளத்தையும், பரஸ்பர மரியாதையையும் இனங்களுக்கிடையிலான புரிதலையும் பிரதிபலிக்கவில்லை என கோபிந்த் சிங் சுட்டிக்காட்டினார்.
தைப்பூச விழாவில், காவடி எடுப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை இவர்கள் கேலி செய்வதும், அவமதித்திருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அமைச்சர் வலியுறுத்தினார்.