
பங்சார், மார்ச் 11 – வரவிருக்கும் DAP கட்சியின் மத்திய செயற்குழு தேர்தலில் கட்சிக்கிடையில் அதிகாரப் போராட்டம் நிலவுவதாக கூறப்படும் கருத்தை நிராகரித்துள்ளார், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின்.
DAP மகளிர் இயக்கத்தின் துணைத் தலைவருமான இயோ, இது ஒரு ஆரோக்கியமான போட்டி என்றும், தேர்தலின்போது சில விஷயங்கள் நடப்பது ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் இயல்பான ஒரு செயல்முறை என்றும் வணக்கம் மலேசியாவுடனான பேட்டியின்போது வருணித்தார்.
DAP தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், அவை கட்சியின் வலிமையை பாதிக்காது எனவும் அவர் வலியுறுத்தினார்.
அப்படியே தேர்தல் சமயத்தில் வேறுபாடுகள் நிலவினாலும், தேர்தலுக்குப் பிறகு கட்சியின் ஒற்றுமையைப் பேணுவதே முக்கியம் என்றார் இயோ.
இதனிடையே, DAP மலேசியாவின் அனைத்து மக்களுக்கான ஒரு வலுவான குரலாக தொடர்ந்து செயல்படுவது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.