
கோலாலம்பூர், ஏப்ரல்-5 – பேராக்கில் பள்ளியொன்றில் மாணவர்களால் பாடப்பட்டதாக் கூறி வைரலான பாடல் தேசிய கீதமான Negaraku அல்ல!
மாறாக, பேராக் மாநிலத்தின் மாண்பை பறைசாற்றும் ‘Allah Lanjutkan Usia Sultan’ பாடல் என கல்வி அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.
அப்பாடலானது, மேன்மைத் தங்கிய பேராக் சுல்தான் மற்றும் பேராக் அரச வம்சத்துக்கான மரியாதை, அன்பு மற்றும் விசுவாசத்தின் அடையாளமாகும்.
எனவே, உண்மை விஷயம் தெரியாமல், அரசியல் பிரபலம் ஒருவர் அதனை வைரலாக்கியிருப்பது குறித்து அமைச்சு ஏமாற்றம் தெரிவித்தது.
பள்ளி மாணவர்கள் தேசிய மொழியில் அல்லாமல் சீன மொழியில் Negaraku பாடியதாக, அந்த வைரல் வீடியோவில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், அந்த வீடியோவில் ‘Allah Lanjutkan Usia Sultan’ பாடலைத் தான், மாணவர்கள் தேசிய மொழியில் சரியான வரிகளோடு பாடுவது தெளிவாகக் கேட்கிறது.
எனவே, தலையும் புரியாமல் வாலும் புரியாமல் தவறாக வியாக்கினம் செய்து கொண்டு, இது போன்ற மக்களைக் குழப்பும் வேலைகளை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுமென, அமைச்சு கேட்டுக் கொண்டது.