
கோலாலம்பூர், ஏப்ரல்-11, தேசிய உயர்கல்வி நிதிக்கழகமான PTPTN கடனுதவி விகிதத்தை மறுஆய்வு செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
கடன் தொகையை அதிகரிப்பதன் தேவை குறித்து அரசாங்கம் பேசியுள்ளது.
என்றாலும், அதனால் நாட்டின் கடன் சுமை மீது ஏற்படப் போகும் தாக்கத்தை ஆழமாக ஆராய வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.
PTPTN-னின் மொத்தக் கடன் தொகை 40 பில்லியன் ரிங்கிட்டாகும்.
ஒருவேளை மாணவர்களுக்கு வழங்கும் கடன் தொகையை அரசாங்கம் மேலும் அதிகரித்தால், அது 50 பில்லியன் ரிங்கிட்டை எட்டும் என்றார் அவர்.
எது எப்படி இருப்பினும், சமூக நீதிக்கு ஏற்ப தேவையறிந்து மாணவர்களுக்கு உதவும் கடப்பாட்டில் மடானி அரசாங்கம் உறுதியாக இருப்பதாக, நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.