
வாஷிங்டன், ஏப்ரல்-16, அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் சீனப் பொருட்களுக்கு தடலாடியாக 245 விழுக்காட்டு வரியை அறிவித்து, உலக நாடுகளை அமெரிக்கா விழிபிதுங்க வைத்துள்ளது.
அமெரிக்கா கொண்டு வந்த பரஸ்பர வரி விகித்தத்திற்கு போட்டியாக, பதில் வரியை அறிவித்ததால் பெய்ஜிங் மீது இந்த உயரிய விரி விதிக்கப்படுவதாக, வெள்ளை மாளிகைக் கூறியது.
இவ்விரு உலக வல்லரசுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், 245% வரி உச்சக்கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
கனிமவளங்கள் உள்ளிட்ட இறக்குமதிப் பொருட்களைச் சார்ந்திருப்பதால், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து விசாரிக்குமாறு, அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்ட கையோடு, இந்த 235% வரி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேற்று வரை சீனப் பொருட்களுக்கு 145% வரியை அமெரிக்காவும், அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரியை சீனாவும் அறிவித்திருந்தன.
இப்படி ஒவ்வொரு நாளும் இரு நாடுகளும் மாறி மாறி வரி விகிதத்தை உயர்த்துவதால், உலக நாடுகள் குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்டுள்ள தொழில்துறையே கதிகலங்கிப் போயிருக்கிறது.
வாஷிங்டனின் ‘ஆட்டத்திற்கு’ பெய்ஜிங் என்ன எதிர்வினையாற்றும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.