Latestஉலகம்

தோமி தோமஸின் புதல்வி, ஆஸ்திரேலியப் பிரதமரை எதிர்த்துப் போட்டி

கேன்பரா, ஏப்ரல்-28, தேசிய சட்டத் துறை முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ தோமி தோமஸின் புதல்வி ஹானா தோமஸ், மே 3 ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவர் எதிர்த்து போட்டியிடுவது யாரோ எவரோ அல்ல….மாறாக அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பானீஸைத் தான்.

The Greens கட்சி சார்பில், Grayndler நாடாளுமன்றத் தொகுதியில் ஹானா போட்டியிடுகிறார்.

வழக்கறிஞர், சமூக ஆர்வலர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவரான ஹானாவுக்கு, நாட்டு பிரதமரையே எதிர்த்துப் போட்டியிட முக்கியக் காரணங்கள் உண்டு.

அவற்றில் முக்கியமானது, காசா மக்கள் மீதான இஸ்ரேலின் கொடுமைகளை அல்பானீஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ‘வேடிக்கைப் பார்ப்பதாம்’.

பிரதமரை எதிர்த்துப் போட்டியிடுவது சிலருக்கு ‘பைத்தியக்காரத்தனமாகத்’ தோன்றலாம்; ஆனால் உள்ளபடியே தனக்கு உற்சாகத்தைத் தருகிறது என்கிறார் அவர்.

“முற்போக்கான சிந்தனைகளைப் பேணும் நீண்ட வரலாற்றைக் கொண்ட மலேசியக் குடும்பத்தில் வளர்ந்தது எனது அதிர்ஷ்டம்; என் குடும்பம் எப்போதுமே அரசியல் ஈடுபாட்டை ஊக்குவிக்கும்; எனவே, ஆஸ்திரேலியா எனது தாயகமாக மாறிய பிறகு, நான் The Greens கட்சியில் சேர்ந்தது பெரிய ஆச்சரியமல்ல” என ஹானா சொன்னார்.

என்றாலும், அனைத்துலக மாணவியாக 2009-ல் ஆஸ்திரேலியாவுக்கு மாறி வந்த போது, என்றாவது ஒருநாள் அந்நாட்டு பிரதமரையே நீ எதிர்த்துப் போட்டியிடுவாய் என யாராவது கூறியிருந்தால், நானே நம்பியிருக்க மாட்டேன் என என்றார் அவர்.

150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 40 செனட் சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, மே 3-ஆம் தேதி ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தலில் அந்நாட்டு மக்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!