
கோலாலம்பூர், ஜூன் 1-மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிக் கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அவிரா 2.0 நாடக போட்டி, உயர்க்கல்வி மாணவர்களிடையே மேடை நாடகக் கலைக்கு நல்ல வரவேற்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கலைச்சுடர் பாவைகள், கலைகதிர்கள், யாழி, நாடக விகடன் மற்றும் பைந்தமிழ் புதல்வர்கள் ஆகிய ஐந்து அணிகளைச் சேர்ந்த நாடாக குழுவினர் பங்கேற்று தங்களது ஆற்றலை வெளிப்படுத்தினர். முதல் நாளில் நடைபெற்ற சுற்றில் நாவலை மையப்படுத்தி அந்த ஐந்து அணியினரும் தங்களது திறமையை நிருபித்தனர். இதில் பங்கேற்ற நான்கு அணியினர் தெங்கு பைய்னுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்தவர்களாவர்.
ஜூன் 14ஆம் தேதி இரண்டாம் நாளில் சமுகவியல் சுற்றில் ஆசிரியரும் மாணவரும், முதலாளியும் தொழிலாளியும் மற்றும் முனைவரும் மாணவருமான கதைக் கருவைக் மையமாகக் கொண்டு அவர்களது நாடக படைப்புகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் தமிழ் மொழி கழகத்தின் ஆலோசகரான பேராசிரியர் டாக்டர் பாலக்கிருஷ்ணன் பரசுராமன் , நடிகை ஹேமலதா ஞானப்பிரகாசம் மற்றும் பாடகர் திவான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
விகடன் குழுவினர் முதல் நிலை வெற்றிக் கிண்ணத்துடன் 2,500 ரிங்கிட் , வெற்றிக் கிண்ணம் சான்றிதழ் மற்றும் சுழல் கிண்ணத்தயும் பெற்று அரங்கில் கூடியிருந்த ரசிகர்களின் பலத்த கைதட்டலைப் பெற்றனர். இரண்டாம் நிலையில் வெற்றி பெற்ற கலைக்கதிர் அணியினருக்கு 1, 500 ரிங்கிட், வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழும் , மூன்றாம் நிலையில் வெற்றி பெற்ற யாழி அணியினருக்கு 1000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் வெற்றிக் கிண்ணம் , மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. நான்காவது இடத்தைப் பெற்ற கலைச்சுடர் பாவைகளுக்கு 700 ரிங்கிட், வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழும் , ஐந்தாவது இடத்தைப் பெற்ற பைந்தமிழ் புதல்வர்கள் அணியினர் 500 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் , வெற்றிக் கிண்ணம் மற்றும் , சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த நாடகப் போட்டியில் நீதிபதிகளாக பணியாற்றிய விஸ்வநாதன், டாக்டர் ஆனந்தன் நாகு, அன்பழகன் ஆகியோருக்கு ஏற்பாட்டுக் குழுவினர் தங்களது நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.