
ஆஸ்திரேலியா, ஜூலை 2 – ஆஸ்திரேலியா மெல்பர்ன் விமான நிலையத்திலிருந்து பிரிஸ்பேன் நகருக்குச் செல்லும் விமானத்தில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தபோது 60 சென்டி மீட்டர் பாம்பு நுழைந்ததால் ஏற்பட்ட பரபரப்பில் பயணம் 2 மணி நேரம் தாமதமானது.
ஒருவழியாக பாம்பு பிடிப்பவர் வரவழைக்கப்பட்டு அந்த பாம்பு பிடிக்கப்பட்டது.
முதலில் கொடிய விஷமுள்ள பாம்பு என கருதப்பட்ட நிலையில், பின்னர்தான்
அது பச்சை மரப் பாம்பு என்றும் அது விஷத்தன்மையற்றது என்றும் அறியப்பட்டது.