Latestமலேசியா

தாய்லாந்தில் ஒரு வாரத்திற்குள் 3ஆவது பிரதமர் பொறுப்பேற்பார்

பேங்காக் , ஜூலை 3 – தாய்லாந்து மன்னர் புதிய அமைச்சரவைக்கு பதிவி பிரமானம் செய்துவைக்கும் வேளையில் , இந்த மறுசீரமைப்பில் ஒரு வாரத்தில் மூன்றாவது நபர் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்பார். அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றம் தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை ( Paetongtarn Shinawatra ) வை இடைநீக்கம் செய்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் செவ்வாய்க்கிழமையன்று அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. போக்குகுவரத்து அமைச்சரும் துணைப் பிரதமருமான சூரிய ஜங்ருங்ரேங்கிட் ( Suriya Juangroongruangkit )இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட போதிலும் , ​​அவர் ஒரு முழு நாள் மட்டுமே அப்பதவியை ஏற்றார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பும்தம் வெச்சாயாசாய்
( Phumtham Wechayachai ) புதிய உள்துறை அமைச்சராக பதவியேற்றதோடு துணைப்பிரதமராகவும் நியமிக்கப்பட்டார். Paetongtarn Shinawatra பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, புதிய அமைச்சரவையில் கலாச்சார அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டாதோடு அதிகாரத்தின் உயர் மட்டத்தில் ஒரு இடத்தைப் பிடிக்க அவர் தயாராக இருந்தார். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், டொனால்ட் டிரம்பின் 36 விழுக்காடு வரி அச்சுறுத்தலைத் தவிர்க்கவும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறவும் தாய்லாந்து போராடி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!