Latestமலேசியா

புலாவ் பெர்ஹெந்தியான் படகு கவிழ்ந்த சம்பவம்; போதைப்பொருள் பயன்படுத்தியதாக படகு ஓட்டுநர் ஒப்புதல் வாக்குமூலம்

திரெங்கானு, ஜூலை 3 – கடந்த சனிக்கிழமை புலாவ் பெர்ஹெந்தியானில் நிகழ்ந்த படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூன்று சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்தன்று அப்படகு ஓட்டுநர் தமது உடலில் போதைப்பொருளைச் செலுத்தியதாக பெசுட் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது உடலில் ‘நிமெட்டாசெபம்’ என்ற மருந்தை செலுத்தியதாக போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுப் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த ஆடவனுக்கு நீதிமன்றம் குறிப்பிட்ட உத்தரவாதங்களுடன் 2,500 ரிங்கிட் ஜாமீன் தொகையும் விதித்துள்ளது.

ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் அக்குற்றம் தக்க சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 5,000 அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையம் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!