
கராச்சி, பாகிஸ்தான், ஜூலை 5 – நேற்று, பாகிஸ்தான் கராச்சியின் குடிசைப் பகுதியில், ஐந்து மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உள்ளூர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்னும், இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்து கொண்டிருக்கும் நபர்களை, உள்ளூர் மீட்புப் பணி குழுவினர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று அறியப்படுகின்றது.
சம்பவம் நடந்த நேரத்தில் கட்டிடத்தில் மொத்தம் 100 பேர் இருந்திருக்கலாம் என்று உள்ளூர் காவல் துறையினர்கள் அறிவித்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவம் இப்பகுதியில் நடப்பது இது முதல் முறை அல்ல என்றும், கடந்த ஜூன் 2020 இல், அதே இடத்தில் 40 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.