
லஹாட் டத்து, ஜூலை 7 – கடந்த சனிக்கிழமை, லஹாட் டத்து இந்திய மக்களுக்கு ஊழல் தடுப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதத்தில், ஊழல் தடுப்பு ஆணையமான MACCயின் லஹாட் டத்து கிளையின் இந்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ஒன்று நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் சபா ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) இயக்குனர் டத்தோ கருணாநிதி சுப்பையா, மற்றும் அவரது துணைவியாரும் சபா ‘புஷ்பனிதாவின்’ (PUSPANITA) தலைவியுமான டத்தோ பி. ஜெகதீஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட கருணாநிதி கோயிலை சிறப்பான முறையில் நிர்வகிக்க அக்கோவில் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியதோடு, கோயிலின் நிதி நிர்வாகத்தில் ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் MACCயைத் தொடர்பு கொள்ளுமாறு கோயில் குழு உறுப்பினர்களை
கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கோயில் தலைவர் திரு. ரவி வேலன், கோயில் குழு உறுப்பினர்கள் மற்றும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் கலந்து சிறப்பித்தனர்.