
கூடாட், ஜூலை-8 – சபா, கூடாட்டில் மீன் வலையில் சிக்கிக் கொண்ட 300 கிலோ கிராம் எடையிலான முதலை, வேறு வழியில்லாததால் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு பாதுகாப்பாக இடத்தில் விடப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
நேற்றிரவு 10.30 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, 3 மீட்டர் நீளமுள்ள tembaga வகை அம்முதலை, மீனவப் பெண்ணின் வலையில் சிக்குண்டது.
APM எனப்படும் மலேசியப் பொது தற்காப்புப் படை வந்துசேருவதற்குள், ஊர் மக்கள் முதலையைப் பிடித்து கட்டி வைத்திருந்தனர்.
அதுவோர் உட்புறப் பகுதி என்பதால், அவ்வளவுப் பெரிய முதலையை ஏற்றுவதற்கு பொருத்தமான வாகனம் கிடைக்கவில்லை.
இதையடுத்து ஓர் அம்புலன்ஸ் வண்டியில் அதனை ஏற்றி, சபா வனவிலங்குத் துறையிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.