
கோலாக் கிராய், ஜூலை 11 – கோலாக்கிராய் Guchil யிலுள்ள பள்ளிக்கு வெளியே கருப்பு உடையுடன் முகக்கவரி அணிந்த அடையாளம் தெரியாத ஒருவன், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியை அணுகும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் அங்கு கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குற்றவியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகக்கூடிய மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் போலீசார் தீவிர கவனம் செலுத்துவதாக கோலாக் கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Mazlan Mamat தெரிவித்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிப் பகுதியில், குறிப்பாக பள்ளி அமர்வு முடியும் போது, ரோந்துப் பணிகளை அதிகரிக்க சம்பந்தப்பட்ட காவல்துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் அல்லது அவர்களது காப்பாளர்கள் வரும்வரை பள்ளி வளாகத்திலேயே மாணவர்கள் தங்கியிருப்பதற்கு பள்ளி முதல்வருக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியின் பாதுகாவலர்கள் கண்காணிப்பை வலுப்படுத்துவதுடன்
பள்ளிப் பிள்ளைகள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களுடன் வீட்டிற்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் Superintendan Mazlan Mamat வலியுறுத்தினார்.
இதனிடையே நேற்று பள்ளிக்கு வெளியே அடையாளம் தெரியாத ஆடவன் ஒருவன் நெருங்கியதை கூறும் நான்காம் வகுப்பு மாணவியின் வீடியோவும் வைரலாகியது.
தன்னை அழைத்துவரும்படி தனது தந்தை கூறியதாக அந்த நபர் கூறியதாகவும் , இதனைஉறுதிப்படுத்துவதற்காக அந்த நபரிடம் தனது தந்தையின் பெயரைக் கூறும்படி கேட்டபோது அதற்கான பதிலை அந்நபரால் தெரிவிக்க முடியவில்லை என்றும் அந்சிறுமி கூறினார்.