
உலு சிலாங்கூர், ஜூலை-14- சிலாங்கூர் அரசுக்கு சொந்தமான Smart Selangor பேருந்து, உலு சிலாங்கூர், புக்கிட் செந்தோசா அருகே ஜாலான் தூலிப் தீகாவில் இன்று காலை குடை சாய்ந்தது.
அப்போது ஓட்டுநர் உட்பட பேருந்தினுள் நால்வர் இருந்தனர். அதில், 38 வயது தாயும் அவரின் 9 வயது மகளும் சிராப்புக் காயங்களுக்கு ஆளாகி, குவாலா குபு பாரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காலை 11 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் 57 வயது பேருந்து ஓட்டுநரும், 17 வயது பையனும் காயமின்றி தப்பினர்.
புக்கிட் செந்தோசா தீயணைப்பு -மீட்புத் துறை அதனை உறுதிப்படுத்தியது.