Latestமலேசியா

சர்ச்சைக்குரிய காதல் நிகழ்ச்சியில் நிர்வாண நடவடிக்கை இருந்தன 3- போலீஸ் உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர், ஜூலை 16 – சர்ச்சைக்குரிய eHati திருமண ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் நிர்வாணம் சம்பந்தப்பட்ட ஒரு நடவடிக்கை இடம்பெற்றிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம்தேதி முதல் 30ஆம்தேதிவரை நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதி நாளில் “குயின்ஸ் நைட்” பிரிவின் போது நிர்வாணம் தொடர்பான செயல்கள் நடந்ததாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் உசேய்ன் ஒமார் கான் ( Hussein Omar Khan ) தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் வாக்குமூலத்தை வழங்க முன்வரும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வின் இறுதி நாளன்று இரவின் போது, தொடக்கத்தில் பிகினி உடையணிந்திருந்த ஒரு பெண் பேச்சாளர், பங்கேற்பாளர்களுடன் நிர்வாணமாக நடனமாடியதாக முகநூல் பயணர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!