
ஜெலுபு, ஜூலை 17 – Kuala Kelawang கில் தனக்கு சொந்தமான டுரியான் தோட்டத்தில் சொந்தமாக சுட்டுக்கொண்டதாக நம்பப்படும் 60 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் மரணம்
அடைந்தார்.
நேற்று மாலை மணி 5 அளவில் தனது டுரியான் தோட்டத்திற்கு சென்ற அந்த ஆடவர் இரவு ஏழு மணிக்குள் வீட்டிற்கு திரும்பிவிடும் வழக்கத்தை கொண்டிருந்ததாகவும் ஆனால் நேற்றிரவு 9 மணியாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவரது அவரது மனைவி கவலைக்கு உள்ளானார்.
அதன்பிறகு தனது தனது கணவரின் உறவினரிடம் இது குறித்து தெரிவித்ததோடு அவரை தேடி டுரியான் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு நெஞ்சில் துப்பாக்கிச் சூடு காயத்தோடு தரையில் சுயநினைவின்றி கணவர் விழுந்துகிடந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதனிடையே டுரியான் தோட்டத்தில் தனது சகோதரர் மரணம் அடைந்தது குறித்து அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். தனது தோட்டத்திற்கு வரும் திருடர்களை அச்சுறுத்த விரும்பிய அவர், இறுதியில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக நம்பப்படுவதாக அவர் கூறினார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜெலுபு மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Azizan Said தெரிவித்தார்.