Latestமலேசியா

பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட சடலம், 4 நாட்களுக்கு முன் காணாமல் போன கல்லூரி மாணவியினுடையது

கோலாலம்பூர், ஜூலை 30 – நேற்று, பூச்சோங்கிலுள்ள சுங்கை கிளாங் பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட சடலம் கடந்த வாரம் காணாமல் போன 23 வயது தனியார் கல்லூரி மாணவியினுடையது என்று நம்பப்படுகின்றது.

கடந்த ஜூலை 26 ஆம் தேதியன்று, அப்பெண் காணாமல் போய் விட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது என்று சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் Wan Azlan Wan Mamat  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இறந்த அந்த பெண்ணின் உடலை பரிசோதித்ததில் பாதிக்கப்பட்டவரின் கால்சட்டை பாக்கெட்டில் ஒரு சாவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன அந்த மாணவியின் அங்க அடையாளங்கள் இறந்தவரோடு ஒத்து போவதால் குடும்பத்தாரிடம் உடலை ஒப்படைக்க முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் உடலில் காயத்தின் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் Wan Azlan மேலும் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!