
ஒஹாயோ, ஆகஸ்ட்-3,
மருத்துவ உலகின் மற்றோர் அதிசயமாக, அமெரிக்காவில்
31 ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருந்த கரு முட்டையிலிருந்து ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.
லிண்டா ஆர்ச்சட் (Linda Archerd) என்ற மாது, 1994-ஆம் ஆண்டு தானமாக வழங்கிய கருமுட்டையே அது.
11,148 நாட்கள் உறைந்த நிலையில் வைக்கப்பட்ட அந்தக் கரு முட்டை, அண்மையில் Tim Pierce, Lindsey Pierce என்ற தம்பதிக்கு தானமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 26-ஆம் தேதி பிறந்த இக்குழந்தை, உலகின் மிக வயதான கருவிலிருந்து பிறந்த குழந்தையாகப் புதியச் சாதனையைப் படைத்துள்ளது.
நீதிமன்றம் கடந்தாண்டு வழங்கிய தீர்ப்பின் படி, உறைந்த நிலையில் வைக்கப்பட்ட கருமுட்டையும் குழந்தையாகவே கருதப்படும்.
அப்படிப் பார்த்தால் பிறந்துள்ள இக்குழந்தைக்கு 31 வயதாகும்.
இவ்வேளையில் தனது கருமுட்டையிலிருந்து பிறந்துள்ள Thaddeus Daniel Pierce எனும் அக்குழந்தையை என்றாவது ஒரு நாள் நேரில் காண விரும்புவதாக தற்போது 62 வயதான லிண்டா கூறியுள்ளார்.