
ஜோகூர் பாரு – ஆகஸ்ட் 4 – வாகன நுழைவு அனுமதி (VEP) RFID அட்டைகளை கொண்டிராதா, 1,489 சிங்கப்பூர் வாகனங்களுக்கு மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) சம்மன்களை அனுப்பியுள்ளது.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் சிங்கப்பூரிலிருந்து வரும் வெளிநாட்டு வாகனங்களின் மீது வாகன நுழைவு அனுமதி
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒரு மாத கால சோதனை நடவடிக்கையில், மொத்தம் 445,800 ரிங்கிட் பெறுமானமுள்ள சம்மன்களை சாலை போக்குவரத்து துறை சேகரித்துள்ளது என்று RTD மூத்த அமலாக்க இயக்குனர் முஹம்மது கிஃப்லி ஹாசன் கூறியுள்ளார்.
மலேசியாவிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, அனைத்து வெளிநாட்டு வாகன உரிமையாளர்களும் தங்கள் VEP RFID குறிச்சொற்களைப் பதிவுசெய்து, அதனை செயல்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனனர்.