
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – தேசிய தரவுத்தள அமைப்பான PADU, RON95 எரிபொருள் மானியத்தை நடைமுறைப்படுத்தும் முதல் கட்ட முயற்சிக்கான முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறியுள்ளார்.
30.4 மில்லியன் நபர்களின் சுயவிவரங்களை உள்ளடக்கிய PADU தரவுகளின் அடிப்படையில், நிதி அமைச்சு RON95 மானியத்தைப் பெற கூடிய தகுதி உடையவர்களை அடையாளம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், RON95 திட்டம் கூடிய விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது என்று அவர் மக்களவையில் பதிலுரைத்துள்ளார்.
204 அரசாங்க நிறுவனங்கள் தற்போது PADU உடன் தொடர்ந்து தரவுகளை பகிர்ந்து கொண்டு ஒருங்கிணைந்துள்ளன என்றும், இதுவரை 9 தனித்துவமான பயன்பாட்டிற்கான விண்ணப்பங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன என்றும் அறியப்படுகின்றது.