Latest
விற்பது நினைவுப் பரிசு என்று பார்த்தால் வனவிலங்குகளின் உடல் பாகங்கள்; சோதனையில் அம்பலம்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-19 – நினைவுப் பரிசு விற்பனை என்ற போர்வையில் வனவிலங்குகளின் உடல் பாகங்களை விற்று வந்த கும்பல் பெட்டாலிங் ஜெயாவில் முறியடிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள பேரங்காடியொன்றில் 2 கடைகள் மற்றும் 4 நினைவுப்பரிசு அங்காடிகளில் நடத்தப்பட்ட சோதனையில் அந்நடவடிக்கை அம்பலமானது.
வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் சோதனையில் இறங்கின.
அதில், பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பல்வேறு உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றின் மொத்த மதிப்பு RM244,900 ஆகும்.
5 உள்ளூர் ஆடவர்களும் 2 இந்தோனேசியர்களும் விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் மேல் நடவடிக்கைக்காக PERHILITAN-னிடம் ஒப்படைக்கப்பட்டன.