
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-22 – நாளை சனிக்கிழமை ஆகஸ்ட் 23-ஆம் தேதி பத்து மலை, Shenga மாநாட்டு மண்டபத்தில் ‘Old is Gold Live in KL’ இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இது காலத்தால் அழியாத மெல்லிசைகளால் நிரம்பிய ஒரு மாயாஜால இரவாக அமையவிருப்பதாக, ஏற்பாட்டாளரான Vishal Steremxy Enterprise நிறுவனத்தின் விஷால் கூறினார்.
இதில் ரக்ஷிதா, ஜெயஸ்ரீ, டிவைன் டிவைனேஷ் (Divine Divinesh), மூக்குத்தி முருகன், முகேஷ் மற்றும் எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் மற்றும் கலைஞர்களின் படைப்பு இடம்பெறவிருக்கிறது.
வாரக் கடைசி விடுமுறையில் இறவா இசை விரும்பிகளுக்கு நல்லதொரு விருந்தாய் இந்நிகழ்ச்சி அமையுமென, Tasly Marketing Sdn Bhd நிர்வாக இயக்குநர் டத்தோ Dr ரவீ பக்கிரிசாமி தெரிவித்தார்.
RM100 ரிங்கிட்டில் Gold டிக்கெட்டுகள், RM50 வெள்ளியில் Silver டிக்கெட்டுகள் என இரண்டு நிலைகளில் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் +6018-397 7643 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலமோ அல்லது வாட்சப் செய்தியை அனுப்புவதன் மூலமோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
Ticket2u.com.my தளத்திலும் டிக்கெட்டை வாங்கலாம்.