
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள வளாகம் ஒன்றில் ஜாலூர் கெமிலாங் தலைகீழாக தொங்கவிடப்பட்ட புதிய சர்ச்சைத் தொடர்பான விசாரணையை போலீஸ் தொடங்கியுள்ளது.
1963-ஆம் ஆண்டு சின்னங்கள் மற்றும் பெயர்கள் சட்டம் மற்றும் சிறு குற்றங்கள் சட்டத்தின் கீழ் விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலிஸ் துணை தலைவர் நுசுலான் முகமது டின் (Nuzulan Mohd Din) தெரிவித்தார்.
கொடிகளை இவ்வாறு தொங்கவிட்ட வளாக உரிமையாளர், மற்றும் சம்பந்தப்பட்ட தொழிலாளி மீது போலீசாரால் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் விசாரணை இன்னும் நடைபெற்று வருவதுடன், அது விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில், சம்பவத்துக்கான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதால், நெட்டிசன்கள் பலர் கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.