
கோலாலம்பூர் – ஆக 29 – செமினியில் அடுக்ககத்திலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்ததைத் தொடர்ந்து மரணம் அடந்தார். இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை மணி 5.18 அளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பை பெற்றதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே 48 வயதுடைய அந்த பெண் இறந்ததை அங்கு வந்த மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
அப்பெண் கார் நிறுத்துமிடத்தில் விழுவதற்கு முன் அந்த அடுக்கு மாடியின் 14ஆவது மாடியிலுள்ள முற்றத்தில் அமர்ந்திருந்ததை கண்டதாக பாதுகாவலர் ஒருவர் தெரிவித்தார். தலை மற்றும் தொடையில் அவர் கடுமையான காயத்திற்கு உள்ளானதாக நம்பப்படுகிறது. அவரது உடல் சவப் பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.