Latestமலேசியா

MyKad அட்டை வாயிலாக நாளை முதல் 100 ரிங்கிட் SARA உதவியை மலேசியர்கள் பயன்படுத்தலாம்

கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் MyKad அட்டை வாயிலாக வழங்கப்படும் 100 ரிங்கிட் SARA உதவியை, நாளை ஆகஸ்ட் 31 முதல் பயன்படுத்தலாம்.

இந்த 100 ரிங்கிட் மூலம் நாடளாவிய நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4,500 கடைகளில் பொருட்களை வாங்கலாம். ஆனால் அதனை ரொக்கமாக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் one off முறையில் அதாவது ஒரே ஒரு முறை மட்டுமே இந்த 100 ரிங்கிட் Sumbangam Asas Rahmah உதவி வழங்கப்படுகிறது. டிசம்பர் 31 வரை இது செல்லுபடியாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!