Latestமலேசியா

7 நாட்கள் 9 மலைகள் துணிகர முயற்சி: 5-ஆவது நாளை நிறைவுச் செய்தார் லோக சந்திரன்

7 நாட்களில் 9 மலைகளை ஏறும் சாதனை முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர் Loga Chandran, 5-ஆவது நாளை வெற்றிகரமாக நிறைவுச் செய்துள்ளார். நேற்றிரவு அவர் கெடா கூனோங் ஜெராய் (Gunung Jerai) மலையேறி முடித்துள்ளார்.

1,217 மீட்டர் உயரத்தில் சகாப்தங்களின் மலை என்றழைக்கப்படும் இம்மலையின் பாதை மிகவும் நீண்டதும், சிகரத்தை அடையவே சுமார் 7 மணி 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு கரடுமுரடான மேடு பள்ளங்களால் ஆனது.

என்றாலும் உச்சியை அடைந்தபோது, கெடா சமவெளி மற்றும் மலாக்கா நீரிணையின் அபூர்வமான காட்சிகள் தங்களின் சோர்வுகளை மறக்கடிக்கச் செய்ததோடு, மெய்மறக்கச் செய்ததாக லோக சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பிற்பகல் 3.50 மணிக்கு தொடங்கிய அப்பயணம் இரவு 11.32 மணியளவில் முடிவுற்றது. என்னுடைய 5-ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது; இந்த மலைக்குச் செல்வதில், என் சகோதரர் ஜெய்சந்திரன் என்னுடன் ஏறிய வேளை, மற்ற சகோதரர்கள் நவீந்திரன், சாத்தீஷ், உதயச்சந்திரன் ஆகியோர் வாகனம் ஓட்டுதல், ஏற்பாடுகள் மற்றும் தரையில் தேவையான அனைத்தையும் கவனித்துக்கொண்டனர்.

அவர்களின் தியாகமும் ஆதரவும் இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமில்லை; மேலும், எங்கள் மலை வழிகாட்டி MGP Faizal அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றி.அவரின் அனுபவமும் வழிகாட்டுதலும் எங்களை பாதுகாப்பாக உச்சியை அடையச் செய்தது.

அவர்கள் தான் இந்த மலேசியா புத்தக சாதனை முயற்சியின் முதுகெலும்பு என லோகசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இன்றைய சவால் – பேராக், குனோங் பிந்தாங், (Gunung Bintang) மலையில் காலை 8.20 மணியளவில் தொடங்கியுள்ளது. இதனை ஏறி இறங்க சுமார் 10 முதல் 12 மணி நேரங்கள் என கணித்துள்ளார் Loga Chandran.

அவரின் அனுபவமும் வழிகாட்டுதலும் எங்களை பாதுகாப்பாக உச்சியை அடையச் செய்தது.

“இதனுடன், 5-ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது; என் சகோதரர்களுக்கும் முழு குழுவினருக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்” என்றார் அவர்.

அவர்கள் தான் இந்த மலேசியா புத்தக சாதனை முயற்சியின் முதுகெலும்பு. இன்னும் மீதமுள்ள சிகரங்களை எட்டுவதற்காக நாம் ஒன்றிணைந்து முன்னேறுகிறோம்.

இன்றைய சவால் – பேராக், குனோங் பிந்தாங், (Gunung Bintang) மலையில்
காலை 8.20 மணியளவில் ஏற்றத்தைத் தொடங்கியது.

சுமார் 10 முதல் 12 மணி நேரங்களில் இறங்கி வருவோம் என எதிர்பார்க்கப்படுகிறது லோக சந்திரன் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!