
நாட்டிங்ஹாம், இங்கிலாந்து, செப்டம்பர் 4 – இந்தியாவைச் சேர்ந்த பைக்கர் யோகேஷ் அலேகாரியின் (Yogesh Alekari) உலகைச் சுற்றும் சவாலில் பயன்படுத்தப்பட்ட KTM 390 எனும் எண் பட்டை கொண்ட அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள் இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் (Nottingham, England) திருடப்பட்டது.
மும்பையிலிருந்து கடந்த மே மாதம் புறப்பட்ட அவர், அம்மோட்டாரைப் பயன்படுத்தி 17-க்கும் மேற்பட்ட நாடுகள் வழியாக 15,000 மைல்கள் (24,000 கி.மீ) பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் இங்கிலாந்து பூங்காவில் மோட்டாரை நிறுத்திய போது, அவரது மோட்டாருடன் சேர்ந்து அவரது விலைமதிக்கத்தக்க உடைமைகளான மடிக்கணினி, கேமரா, பாஸ்போர்ட், பணம் ஆகியவையும் திருடுப் போயின.
எல்லாவற்றிற்கும் மேலாக கருதிய தனது மோட்டாரை இழந்தது தமக்கு பெரும் வேதனையாயுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அப்பகுதி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், திருட்டை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.