
பட்டர்வெர்த் , செப்டம்பர் 9 – கடந்த மாதம், பட்டர்வெர்த் தெலாகா ஆயர் பகுதியிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில், திருட்டு மற்றும் வீசா காலம் மீறல் குற்றச்சாட்டில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 8 மாதங்கள் சிறை தண்டனையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
36 வயதான அந்நபர் இன்று பட்டர்வொர்த் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஆடவன் 11 மாதக் குழந்தை உட்பட மேலும் இருவரை கத்தியால் தாக்கியதைத் தொடர்ந்து அதே நாளில் 180 ரிங்கிட் மதிப்பிலான கடல் உணவுகள் மற்றும் கோழிகளைத் திருடியுள்ளான்.
மேலும் அந்நபர் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக காலாவதியான விசாவை கொண்டு மலேசியாவில் தங்கியிருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.