Latest
கிள்ளானில் கார் – மோட்டார் சைக்கிள் மோதல்; ஆடவர் மரணம்
கிள்ளான், செப் 17 – கிள்ளானில் நேற்றிரவு ஜாலான் Batu Belah வில் Ducati மோட்டார் சைக்கிளும் புரோடுவா மைவி காரும் சம்பந்தப்பட்ட விபத்தில் 42 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மரணம் அடைந்தார். இரவு மணி 11.40 அளவில் புரோடுவா மைவி காரில் மோதிய பின் அந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததாக வட கிள்ளான் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் மூத்த அதிகாரி ரபிஷி தாய்ப்
( Rafizi Taib ) தெரிவித்தார். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்ததை சுகாதார அமைச்சின் அதிகாரி உறுதிப்படுத்தினார்.