Latestஉலகம்

தைவானில் குழாய் நீரில் துர்நாற்றம்; நீர்த் தொட்டியில் சடலம் கண்டெடுப்பு

தைவான், செப்டம்பர் 18 – தைவானில் குடிநீரில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அதன் குடியிருப்பு கட்டிடத்தின் நீர்த் தொட்டியில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் அந்த நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய வந்த ஆடவர் அந்தச் சடலத்தை கண்டவுடன் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

நீர்த்தொட்டியின் உட்பகுதிக்குள் செல்ல பயன்படுத்தப்படும் ஏணி சேதமடைந்திருந்ததால் பாதிக்கப்பட்டவர் ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மரணமடைந்தவர் சுமார் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான வீடுகளில் குடிநீரைக் கொதிக்கவைத்து பயன்படுத்தப்படுவைத்தால் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான அபாயங்கள் மிகக் குறைவு என்று நிபுணர்கள் கருத்துரைத்த வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!