
ஹாங்காங் செப்டம்பர் -19,
ஹாங்காங்கில் 65 வயதான பேருந்து ஓட்டுனர் ஒருவர் பயணிகளைப் பாதுகாப்பாக தரையிறக்கியதற்காக “வீர டிரைவர்” என மக்களால் புகழப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 15 ஆம் தேதியன்று நெடுஞ்சாலையில், பேருந்திற்கு முன்னே பயணித்து கொண்டிருந்த லாரியிலிருந்து 1.5 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி ஒன்று கீழே விழுந்து, பேருந்தின் கண்ணாடியை ஊடுருவி நேரடியாக ஓட்டுனரின் உடலைத் தாக்கியது.
கடுமையான காயம் ஏற்பட்டிருந்த போதிலும், அவர் நிதானமாக வண்டியை மெதுவாக சாலையோரத்தில் நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.
அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதென்றும் உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு, டிரைவரின் தொழில்முறை பொறுப்புணர்வை வலைத்தளவாசிகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.