
பாரீஸ், செப்டம்பர்-23,
PSG அணியின் உஸ்மான் டெம்பேலே (Ousmane Dembele) 2025-ஆம் ஆண்டுக்கான பலோன் டோர் (Ballon d’Or) விருதை வென்றுள்ளார்.
கால்பந்து உலகில் தனிநபருக்கு வழங்கப்படும் மிக பிரசித்திப் பெற்ற இந்த விருதை, பிரான்ஸ் நாட்டின் முதன்மை கால்பந்து சஞ்சிகையான France Football ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
அவ்வகையில் இன்று அதிகாலை பாரீஸில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான விருதளிப்பில், 28 வயது தாக்குதல் ஆட்டக்காரரான டெம்பேலே, பார்சலோனாவின் லாமின் யமால் (Lamine Yamal) மற்றும் சக PSG வீரர் வித்தின்யாவை (Vitinha) வீழ்த்தி, விருதைக் கைப்பற்றினார்.
லிவர்பூல் கோல் மன்னன் Mohd Salah நான்காமிடத்தைபே பிடித்தார்.
இந்த விருதின் மூலம், தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் சிறந்த பருவங்களில் ஒன்றை டெம்பேலே பதிவுச் செய்தார்.
2024/2025 பருவத்தில் PSG-யின் வரலாற்று வெற்றியில் டெம்பேலே பெரும் பங்கைக் கொண்டிருந்தார்.
குறிப்பாக, முதல் முறையாக Champions League கிண்ணத்தை அவ்வணி வென்ற போது, டெம்பேலே போட்டியின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.
அதோடு உள்நாட்டு லீக்கில் PSG-க்கு 37 கோல்களை அடித்து, 15 கோல்களைப் போட உதவினார்.
இவ்வேளையில், சிறந்த இளம் ஆட்டக்காரராக Lamine Yamal, சிறந்த கோல் காவலராக Gianluigi Donnarumma, சிறந்த பயிற்சியாளராக Luis Enrique தேர்ந்தெடுக்கப்பட்டனர்.