Latest
புருணை ரிங்கிட்டிற்கு பதிலாக டாலர் புருணை என்ற பெயரில் புதிய பண நோட்டு – புருணை அறிமுகம்

புருணை, செப் 23 –
புருணை ரிங்கிட்டிற்கு பதிலாக டாலர் புருணை என்ற என்ற பெயரில் தரப்படுத்தும் புதிய பண நோட்டை புருணை அறிமுகப்படுத்தும்.
இந்த புதிய பண நோட்டுக்கள் அடுத்த ஆண்டு முதல் பாதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக புருணையின் மத்திய வங்கி வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில் BND1, BND5, BND10, BND100 மற்றும் BND500 ஆகிய ஐந்து மதிப்புகள் உள்ளன.BND1, BND5, BND10 மற்றும் BND100 பண நோட்டுகளில் புருணை சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் உருவப்படம் பெருமையுடன் தக்கவைக்கப்படும், அதே நேரத்தில் BND500 பண நோட்டில் அல்-மர்ஹூம் சுல்தான் ஹாஜி உமர் ‘அலி சைபுதீன் சாதுல் கைரி வாடியனின் ( Al-Marhum Sultan Haji Omar ‘Ali Saifuddien Sa’adul Khairi Waddien) உருவப்படம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.