Latest

ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பட்ட சடலத்தில் ஆடவரின் இதயத்தைக் காணவில்லையா? உடல் உறுப்புத் திருட்டு குற்றச்சாட்டை மறுத்த பாலி மருத்துவமனை

டென்பசார், செப்டம்பர்-25,

இந்தோனேசியாவின் பாலியில் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் தாய்நாட்டுக்கு அனுப்பப்பட்டபோது இதயம் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாண்டு மத்தியில், 23 வயது Byron Haddow தனது வில்லா நீச்சல் குளத்தில் உயிரிழந்தார்.

பின்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இரண்டாவது உடற்கூறு பரிசோதனையில், அவரது இதயம் இல்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

இதனால் “உடல் உறுப்பு திருட்டு” குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உரிய விளக்கம் தேவை என ஆஸ்திரேலியா இந்தோனேசியத் தரப்பை வற்புறுத்தியது.

எனினும், அக்குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட மருத்துவமனை தரப்பு திட்டவட்டமாக நிராகரித்தது.

இது தவறான வதந்தி என்று மறுத்த அதன் இயக்குநர், உண்மையில் சட்டப்படி நீண்ட உடற்கூறு பரிசோதனையைக் கடக்க வேண்டியிருந்ததாலேயே, இதயம் தாமதமாக அனுப்பப்பட்டதாக விளக்கமளித்தார்.

இறுதியில், Byron-னின் இதயம் அவர் இறந்த 2 மாதங்களுக்கு பிறகு, ஆகஸ்டில் குயின்ஸ்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

என்றாலும், இச்சம்பவம் பாலியில் மருத்துவ நடைமுறைகள் மீது பெரும் சந்தேகத்தை எழுப்புவதாக அவரின் குடும்பம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!