
தாவாவ், செப்டம்பர் -26,
மலிவுக் கட்டண விமான நிறுவனத்தின் பயணத்தில் குண்டு இருப்பதாக பொய்யான மிரட்டல் அனுப்பிய குற்றச்சாட்டில், சீன நாட்டுப் பெண் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் இன்று தாவாவ் நீதிமன்றம் ரிங்கிட் 5,000 அபராதம் விதித்தது.
ஏர் ஆசியா நிறுவனதின் “Ask Bo” என்ற சுயசேவை பயன்பாட்டின் மூலம் “human service emergency bomb dangerous” என்ற தகவலை அனுப்பி, அந்த விமான நிறுவன ஊழியரை அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தான் அனுப்பிய தகவலின் தீவிரத்தை அறியாமல் இத்தகைய காரியத்தை அந்த பெண் செய்து விட்டார் என அவரின் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
ஆனால், அரசு தரப்பை பிரதிநிதித்த வழக்கறிஞர் இத்தகைய பொய்யான மிரட்டல்கள் பொதுமக்கள் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து விளைவிக்கக்கூடியவை என்பதால், கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.
நீதிமன்றம், இருதரப்பினரின் வாதங்களையும் கருத்தில் கொண்டு, அபராதத்தை விதித்ததோடு, அதை செலுத்தத் தவறினால் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
விமான இருக்கை மாற்றம் தொடர்பான அதிருப்தியால் அந்தத் தம்பதியினர் பொய்யான குண்டு மிரட்டலை விடுத்ததாக அறியப்படுகின்றது.