Latestமலேசியா

பாட்டியை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டியை துரத்திய பரபரப்பில் சிவப்பு விளக்கை மீறிய காரோட்டி; 5 வாகனங்கள் மோதல்

கூலிம், செப்டம்பர்-30,

கெடா, கூலிமில் தனது பாட்டியை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்ற அம்புலன்ஸ் வண்டியைப் பின்தொடர்ந்து வேகமாகச் சென்ற Perdua Bezza காரோட்டி, அந்த பரபரப்பில் சாலை சமிக்ஞையின் சிவப்பு விளக்கை மீறியதில், 5 வாகனங்கள் மோதிக் கொண்டன.

மொத்தமாக 4 கார்களும், 19 வயது கல்லூரி மாணவர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் அவ்விபத்தில் சிக்கின.

Kulim Hi Tech பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, மாவட்ட போலீஸ் தலைவர் Zulkifli Azizan கூறினார்.

Perodua Bezza சிவப்பு விளக்கை மீறி, சரியான பாதையில் நின்றிருந்த Grand Livina MPV வாகனத்தை மோதித் தள்ளியது.

இதனால் குப்புறக் கவிழ்ந்த Livina, எதிர் திசையில் இருந்த Proton Saga, Toyota Camry மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை மோதியது.

விபத்துக்குக் காரணமான Perodua Bezza-வும் சாலையில் கவிழ்ந்து பெரும் சேதமடைந்தது.

அதன் ஓட்டுநருக்கு நெஞ்சுப் பகுதியிலும், Grand Livina ஓட்டுநரான பெண்ணுக்கு தலை மற்றும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன.

மோட்டார் சைக்கிளிலிருந்த 2 மாணவர்கள் கைக் கால்களில் காயமுற்றனர்.

மற்ற 2 வாகனமோட்டிகளுக்கு காயங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!